×

ராஜஸ்தானில் இந்திய ஒற்றுமை நடைபயணம்: மோடி என கூச்சலிட்டு வெறுப்பேற்றிய பாஜக தொண்டர்கள்.. பறக்கும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய ராகுல் காந்தி..!!

ஜாலவார்: ராஜஸ்தானில் நடை பயணத்தின் போது மோடி.. மோடி.. என கூச்சலிட்டு வெறுப்பேற்றிய பாஜக தொண்டர்களை நோக்கி ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது பயணத்தின் ஒருபகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜாலவார் மாவட்டம் வழியே நடந்து சென்றார். அங்கிருந்து பாஜக அலுவலகம் வழியாக அவர் நடைப்பயணத்தை மேற்கொண்ட போது அந்த அலுவலகத்தின் மாடியில் இருந்து பாஜக நிர்வாகிகள் மோடி.. மோடி.. என்று குரல் எழுப்பினர். அவர்களை பார்த்து ராகுல் காந்தி, பறக்கும் முத்தம் கொடுத்தார். நடைப்பயணத்தில் ராகுல் உடன் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்  வரை மொத்தம் 3,500 கி.மீ. தூரத்தை 150 நாட்களில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவர் தனது நடைப்பயணத்தை முடித்து தற்போது ராஜஸ்தானில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். …

The post ராஜஸ்தானில் இந்திய ஒற்றுமை நடைபயணம்: மோடி என கூச்சலிட்டு வெறுப்பேற்றிய பாஜக தொண்டர்கள்.. பறக்கும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய ராகுல் காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : Indian ,Hiking ,BJP ,Modi ,Ragul Gandhi ,Jalawar ,Rajasthan ,Rahul Gandhi ,Bajaka ,Unity ,
× RELATED பாஜகவுக்கு பாதகமான சூழல்கள்...